2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

இராஜினாமா செய்தார் பிரதமர் மஹதிர்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியப் பிரதமர் மஹதிர் மொஹமட் இன்று இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், புதிய கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கிலும், அடுத்த பிரதமராக வரக்கூடிய அன்வர் இப்ராஹிமைத் தடுக்கும் நடவடிக்கையொன்றாகவே பிரதமர் மஹதிர் மொஹமட்டின் இந்த இராஜினாமா தோறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்வர் இப்ராஹிமின் நம்பிக்கை உடன்படிக்கை கூட்டணிக்குள் உள்ள அன்வர் இப்ராஹிம் எதிரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளால் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கடந்தவாரயிறுதி முயற்சியொன்றைத் தொடர்ந்தே பிரதமர் மஹதிர் மொஹமட் இராஜினாமா செய்துள்ளார்.

அன்வர் இப்ராஹிமிடம் அதிகாரத்தை கையளிப்பதாக 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னரே பிரதமர் மஹதிர் மொஹமட் உறுதியளித்திருந்தபோதும், எப்போது அதிகாரத்தை கையளிப்பது என திகதியொன்றை நிர்ணயிப்பதற்கு தொடர்ந்து மறுத்து வந்திருந்தார்.

புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கடந்த வாரயிறுதி முயற்சி இன்று காலையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மன்னருக்கு மலேஷியப் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதமொன்றை பிரதமர் மஹதிர் மொஹமட் அனுப்பியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, பிரதமர் மஹதிர் மொஹமட்டின் இராஜினாமா அறிவிப்புக்கு சற்று முன்னர் அவரின் பெர்சடு கட்சியானது ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், அன்வர் இப்ராஹிமின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் இராஜினாமா செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X