R.Tharaniya / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் புதன்கிழமை (03) அன்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், சீனாவின் நட்பு நாடுகள் உள்பட சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா ஜனாதிபதி புதின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஆகியோர் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து சீன இராணுவத்தின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
அவர்கள் ஒற்றுமையாக பொதுவெளியில் தோன்றியதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே போல் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியன், பெலாரஷியாவின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாசென்கோ, கம்போடியா மன்னர் நரோதம் சிகாமணி, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவாங், மலேசிய ஜனாதிபதி அன்வர் இப்ராகிம், மியான்மர் ராணுவ தலைவர் ஆங் ஹிலாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், கசகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட், கியூபா ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை செர்பியா ஜனாதிபதி மற்றும் ஸ்லொவாக்கியா பிரதமரை தவிர மற்ற தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025