2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இருளில் மூழ்கிய சூடான்

Freelancer   / 2025 ஜனவரி 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில், வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியன கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.

சூடானில், இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. 

இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 16ஆம் திகதி தலைநகர் கார்டூம் அருகே மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை இராணுவப்படை வீரர்கள் டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் அந்த நீர்மின் நிலையம் கடும் சேதத்திற்குள்ளானது. குறிப்பாக நீர்மின் நிலையத்தின் மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்து சிதறின. இதனால் அங்கு மின்சாரம் உற்பத்தி பணி பாதிப்புக்குள்ளாகி மின்தடை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தலைநகரில் உள்ள வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியது. நீர்மின் நிலையத்தை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X