2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இறக்கை உரசியதால் 4 விமானிகள் நீக்கம்

Freelancer   / 2025 ஜூன் 30 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமில் விமானங்களின் இறக்கை உரசியதால் 4 விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நொய் பாய் விமான நிலையத்தில் டியன் பியன் நகருக்கு ஏ-321 என்ற விமானம் புறப்பட தயாராக நின்றது.

அப்போது ஹோ சி மின் நகரத்துக்கு புறப்பட்ட வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அங்கு நின்று கொண்டிருந்த ஏ-321 விமானம் மீது உரசியது. இதில் அந்த விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. 

இதனையடுத்து இரு விமானங்களிலும் இருந்த 386 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஏ-321 என்ற விமானம் ஓடுபாதையில் சரியாக நிறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக 4 விமானிகளை பணியிடை நீக்கம் செய்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .