2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலங்கை குறித்து பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதில் நாடு தற்போது சிறந்த இடத்தில் இருப்பதாகவும், உள்நாட்டுப் பயணத்திற்காக உள்ளூர் பயண முகவர்களுடன் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் வலியுறுத்தியது.

இதேவேளை, நாட்டில் பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை எதிர்வரும் 18, க்குப் பிறகு மேலும் நீடிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த மறுநாளில், பயண ஆலோசனையை பிரான்ஸ் புதுப்பித்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X