Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அளவில் மக்கள் தொகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் நீடித்து வந்த சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தின் சாங்ஷான் என்னும் பகுதியில் அரசு நிர்வாகம் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இளம் வயது திருமணங்கள் அதிகரித்தால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் புதிய திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மணமகளுக்கு 25 வயது அல்லது அதற்கு குறைவான வயது இருந்தால் அந்த தம்பதியருக்கு ஆயிரம் யுவான் (இலங்கை மதிப்பில் ரூ. 66242.52) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதல்முறை திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் என்பது 1.09ஆக இருந்தது. 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிடும்போது இந்த பிறப்பு விகிதம் சற்று குறைவாகும். சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள அதிகாரப்பூர்வ வயது 22 ஆகும். பெண்களுக்கான திருமண வயது 20 ஆகும்.
இருப்பினும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் ஒற்றை பெற்றோராக இருந்து பெண்கள் மட்டும் குழந்தைகளை வளர்த்துக் கொள்வது தொடர்பான கொள்கைகளை அரசு கடுமையாக்கியதால் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
3 hours ago