2025 மே 14, புதன்கிழமை

இஸ்ரேலுக்கு பிரித்தானியா முழு ஆதரவு

Freelancer   / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற பிரித்தானியா விரும்புகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அவர், பிரித்தானியாவின் முழுமையான ஆதரவு இஸ்ரேலுக்கு இருப்பதை நேரில் தெரிவித்தார். 

இதையடுத்து, இருவரும் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த ரிஷி சுனக்,  

இஸ்ரேலின் உரிமையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தன்னை தற்காத்துக் கொள்ள, ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்க இஸ்ரேலுக்கு எங்கள் ஆதரவு உண்டு. பாலஸ்தீன மக்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதாபிமான உதவிக்காக காசாவுக்கான பாதைகள் திறக்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் எடுத்த  முடிவை நான் வரவேற்கிறேன். நீங்கள் அந்த முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X