2025 மே 14, புதன்கிழமை

இஸ்ரேலுக்கு விரைந்த நாசகார கப்பல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர்.
சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உள்ளது.அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .