2025 மே 14, புதன்கிழமை

இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 6-ஆம் திகதி முதல் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், “காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது” என தெரிவித்து இருந்தார்.

இந் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை (18) இஸ்ரேல் செல்ல உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமை வலியுறுத்த புதன்கிழமை (18) நான் இஸ்ரேலுக்குச் செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .