2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இஸ்ரேல் தாக்குதலுக்கு முன்னர் ட்ரம்ப் எச்சரித்தாரென்பதை மறுத்த கட்டார்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் தலைநகர் டோஹாவில் ஹமாஸ் பேரம்பேசுநர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்கு முன்பதாக கட்டார் அதிகாரிகளுக்கு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிவித்த நிலையில், இதை கட்டார் மறுத்துள்ளது.

டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலால் எழுப்பப்பட்ட வெடிப்புச் சத்தங்களின்போதே ஐ. அமெரிக்க அதிகாரியொருவரிடமிருந்து அழைப்புப் பெறப்பட்டதாக கட்டார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஜிட் அல்-அன்ஸாரி எக்ஸில் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே ஐ. அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்ததாக கட்டார் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .