Freelancer / 2026 மார்ச் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஈரானின் வான்படை பலம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகள் பெருமளவில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் மிக நெருங்கிய நிலையை எட்டியிருந்ததால், அவர்களின் அணுசக்தி வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய மையங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலானது ஈரானின் இராணுவ வலிமைக்குக் கொடுக்கப்பட்ட பாரிய அடி எனவும் இது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். (a)

55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago