Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இராஜதந்திர பிரச்சினையின் மத்தியிலிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பலான அட்ரியன் டர்யா 1-இன் கப்டன் அகிலேஷ் குமாருக்கு மில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறியதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவால் கைப்பற்றப்படக்கூடிய எங்காவது பயணிப்பது குறித்து அகிலேஷ் குமாருக்கு ஐக்கிய அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் ஈரான் நடவடிக்கைக் குழுவின் தலைவர் பிரயன் ஹுக் மின்னஞ்சலுப்பியுள்ளார்.
சிரியாவுக்கு எண்ணெய்யைக் கொண்டு செல்வதாகச் சந்தேகிக்கப்படும் அட்ரியன் டர்யா 1 கப்பலானது, இவ்வாண்டு ஜூலை மாதத்தில் பிரித்தானிய அதிகாரிகளால் ஜிப்ரால்டரில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கப்பல் செல்லும் இடம் குறித்து ஈரான் வழங்கிய உறுதிமொழிகளைத் தொடர்ந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கப்பல் விடுவிக்கப்படுவதை தடுக்க முயன்றிருந்த ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம், பின்னர் கப்பலைக் கைப்பற்றும் அழைப்பாணையை விடுத்திருந்தது.
இச்சந்தர்ப்பத்திலேயே பணம் வழங்குவதான தகவல் முதலில் பைனான்ஷியல் டைம்ஸ் இணையத்தளத்தில் நேற்று முதலில் வெளியாகி பின்னர் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025