Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானைக் கட்டுப்படுத்த உலகம் நடவடிக்கை எடுக்கா விட்டால் எண்ணெய் விலைகள் பாரதூரமாக அதிகரிக்கும் என சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் எச்சரித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்காமல் விடுவது ஈரானுக்கு நம்பிக்கை அளிக்கும் எனவும் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும் எனவும் யுத்தமானது பூகோள பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என சி.பி.எஸ் நியூஸிடம் கதைக்கும்போது மொஹமட் பின் சல்மான் கூறியுள்ளார்.
இந்நிலையில், மொஹமட் பின் சல்மானின் கருத்துக்கள் சவுதி அரேபியர்களை அவமானத்துக்குள்ளாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்பட்டதற்கான சில பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள மொஹமட் பின் சல்மால், தன் தனிப்பட்ட ரீதியில் ஜமால் கஷொக்ஜியின் கொலையை உத்தரவிட்டதை மறுத்துள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களைக் கொண்டிருந்த ஜமால் கஷொக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபியாவின் துணைத் தூதரகத்தில் வைத்து கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி கொல்லப்பட்ட நிலையில், ஜமால் கஷொக்ஜியை தனிப்பட்ட ரீதியில் இலக்கு வைத்ததாக மொஹமட் பின் சல்மான் சந்தேகிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமால் கஷொக்ஜியின் கொலையானது சவுதி அரசாங்கத்துக்காகப் பணியாற்றும் தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சவுதி அரேபியாவின் தலைவரொருவராக அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்படதாக சி.பி.எஸ் இன் 60 மினிட்ஸ் செய்தி நிகழ்ச்சியுடனான நேற்றைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜமால் கஷொக்ஜியின் கொலைக்கு நேரடியாக உத்தரவிட்டதை அல்லது அந்நேரத்தில் அது பற்றி அறிந்திருந்ததை மறுத்துள்ளார்.
13 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
41 minute ago