Freelancer / 2024 மே 21 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? அல்லது எதிரி நாடுகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதா எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகொப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த இரண்டுமே, எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியிருப்பதும், ரைசி பயணித்த ஹெலிகொப்டர் மட்டும் மலையில் மோதியிருப்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனாலேயே, இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா எனச் சர்வதேச தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில், இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 3 ஹெலிகொப்டர்கள் பயணித்த நிலையில் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகொப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.S
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago