2025 மே 15, வியாழக்கிழமை

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2022 பெப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு இராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரேனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதர உதவியுடனும், இராணுவ உதவியுடனும் உக்ரேன், ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.

இப்போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 540 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா மீண்டும் உக்ரேன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரேனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .