2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உணவில் விஷம் வைத்த உணவகம்?

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஒன்ராறியோவிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய பலர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,   உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகி அப் பகுதியில்   பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

ஒன்ராறியோவின் Markham பகுதியில் அமைந்துள்ள  பிரபல உணவகமொன்றிலேயே  கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து அங்கு உணவருந்திய பலர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த தீவிர விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் 
 சம்பந்தப்பட்ட  உணவகம் தற்காலிகமாக   மூடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X