Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது வீசாக்களை நீடிப்பதையோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையையோ வறுமையான சட்டரீதியான அகதிகள் பெறுவதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது கடினமாக்கவுள்ளது.
உணவுதவி அல்லது அரச வீட்டுத் திட்டம் போன்ற அரச சலுகைகளில் ஓராண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அகதிகளே இலக்கு வைக்கப்படவுள்ளனர்.
எதிர்காலத்தில் குறித்த அகதிகள் அரச உதவியில் தங்கியிருப்பார்கள் என அரசாங்கம் தீர்மானித்தால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த மாற்றமானது தன்னிறைவுக் கூறுகளை மீண்டும் அமுல்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், மத்திர அரசாங்கப் பதிவேட்டில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த மாற்றமானது, இவ்வாண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவிடவுரிமையை ஏற்கெனவே பெற்றவர்கள் குறித்த மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பதோடு, குறித்த மாற்றமானது அகதிகளுக்கும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் செல்லுபடியாகது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும். வீசா நீடிப்புக்கு விண்ணப்பிப்போர், நிரந்தர வதிவிடவுரிமை அல்லது ஐக்கிய அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் குறித்த மாற்றத்தால் பாதிக்கப்படவுள்ளனர்.
அந்தவகையில், வருமான நியமங்களை அடையாதோர் அல்லது மருத்துவ உதவி அல்லது வீட்டுத் திட்டங்களில் எதிர்காலத்தில் தங்கியிருப்போர் எனக் கருதப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் செல்லத் தடையை எதிர்கொள்ளவுள்ளனர். தவிர, தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவிலுள்ளோரும் இதால் பாதிக்கப்படவுள்ளனர்.
குடியுரிமை இல்லாமல் 22 மில்லியன் சட்டரீதியானோர் ஐக்கிய அமெரிக்காவிலிருப்பதாக மதிப்பிடப்படுகையில் இதில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படவுள்ளனர்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025