2025 மே 14, புதன்கிழமை

’’உதவிகளை தடுக்க மாட்டோம்’’

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எகிப்திலிருந்து காசாவுக்கு வரும் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது” என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது.

இஸ்ரேல் சென்ற அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாக பேசினார். பின்னர், காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன்படி, "எகிப்திலிருந்து வரும் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது. அதேநேரம், எங்கள் பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படாத வரையில், இஸ்ரேல் எல்லையில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காது. ஆனால் எகிப்தில் இருந்து வரும் உதவிகளை தடுக்காது" என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X