Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீஹாரில் கடும்மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த நான்கு நாட்களில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் மாத்திரம் மழை காரணமாக 73 பேர் உயிரிழந்துள்ளதுடன், பீஹாரில் 17 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் வழக்கத்தை விட 1700 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்கள் தான் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிரயாக்ராஜ் நகரில் 102.2 மில்லி மீற்றர், வாரணாசியில் 84.2 மில்லி மீற்றர்மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டும் மழை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக அமேதி, லக்னோ, ஹர்டோய், மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும், மீட்புப் பணிகளை துரிதபடுத்தவும் மாவட்ட அதிகாரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா நான்கு இலட்சம் இந்திய ரூபாய்கள் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மய்யம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago