2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலக தொடர்புகளை புதுப்பிக்கும் சீனா

Freelancer   / 2022 நவம்பர் 26 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ஷீ ஜின்பிங் பதவியேற்ற பின்னர், தனது பிம்பத்தை உயர்த்துவதற்காக உலகத் தலைவர்களுடனான தொடர்புகளை சீனா புதுப்பிக்க விரும்புவதாக தி ஹொங்கொங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார நல்லிணக்கம் குறித்து மன்றாடுவதற்காக ஜேர்மன் சான்சிலர் ஷோல்ஸ் அவசர விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு வருகைதந்தார். 

சர்வதேச சமூகம் அணுசக்தியை நாடுவதன் மூலம் ஒரு கோட்டைக் கடக்கும் என்று அவரது விஜயத்துக்குப் பின்னர் சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டதுடன், ஷீயின் உணர்வுகளை அது குறிப்பிடுகிறது.

தொற்றுநோய் பரவலுக்கு பின்னர், செப்டம்பரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட ஷீ, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். 

மத்திய ஆசியப் பயணங்களுக்கு ஷீ அளித்த முக்கியத்துவத்தை இந்தப் பயணம் காட்டுவதுடன், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை சீனாவின் நட்பு அண்டை நாடுகள், விரிவான மூலோபாய பங்காளிகள் மற்றும் பட்டுப்பாதை முன்முயற்சியின் முக்கியமான உறுப்பினர்கள் என தி ஹொங்கொங் போஸ்ட்தெரிவித்துள்ளது.

சீனா கடுமையான கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி பெய்ஜிங்கிற்கு இராஜதந்திர வருகைகளை அனுமதிக்கும் வகையில் விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது என்று  ஹொங்கொங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சீனா எதிர்கொள்ளும் பெரிய சவால்கள், குறைவான சாதகமான சர்வதேச சூழல் மற்றும் அது சீனா போட்டியிட வேண்டிய ஒரு பகுதி என்று சீன ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாக சீஎன்என்ஐ மேற்கோள் காட்டி ஹொங்கொங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் ஷீயின் வெளிநாட்டு விவகாரங்களில் முன்னுரிமைகள் நட்பு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிப்பதாக சிஎன்என் அறிக்கையை மேற்கோள்காட்டி ஹொங்கொங் போஸ்ட் சுட்டிக்காட்டியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .