2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உலக நாடுகளுக்கு சீனாவின் எச்சரிக்கை

Freelancer   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு பாதகம் ஏற்படும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 

“சமரசங்கள் அமைதியை கொண்டு வராது. எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம்.இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது" என்று தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .