2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

உலகின் பணக்காரராக மஸ்க்கை முந்திய எலிஸன்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பணக்காரராக நீண்ட காலமாக இருந்த எலன் மஸ்கை ஒராக்கிளின் இணை நிறுவுநர் லரி எலிஸன் முந்தியுள்ளார்.

ஒராக்கிலீன் பங்குகள் மூன்றிலொன்று பங்காக புதன்கிழமை (10) வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் உயர்ந்தன. எலிஸனின் நிகர மதிப்பானது டெஸ்லா பிரதமர் நிறைவேற்றதிகாரியான மஸ்கினை விட அதிகமாகியுள்ளது.

எலிஸன் 393 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பையுடைய நிலையில்,  மஸ்கின் நிகர மதிப்பானது இதை விட சில பில்லியன் குறைவாகும். மஸ்கின் டெஸ்லா பங்குகள் செவ்வாய்க்கிழமை (09) வரையில் இவ்வாண்டு 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .