2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகெங்கும் பரவும் சீன செல்வாக்கு பற்றி பிரான்ஸ் ஆய்வு எச்சரிக்கை

Editorial   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸின் பிரபல இராணுவக்கல்லூரியின் மூலோபாய ஆராய்ச்சி நிறுவனம்  அதன் விரிவான அறிக்கையில் உலகெங்கிலும் சீனா தனது செல்வாக்கை செலுத்த ஒரு வலையமைப்பை  உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் செல்வாக்கு நடவடிக்கை என்னும் தலைப்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குலகக் கருத்தை கையாள பீஜிங் பயன்படுத்தும் இரகசிய மற்றும் இரகசியமல்லாத நிறுவனங்கள், நடவடிக்கைகள், வடிவமைப்புகளை தோண்டி எடுத்துள்ளது.

இந்த அறிக்கை பெரும்பாலும் பிரான்ஸ் மொழியில் வெளியிடப்பட்ட சீனாவின் பிரசார இயந்திரத்தின்  மிக விரிவான பகுப்பாய்வு என்று  புலனாய்வு நிபுணர் போல் செரோன் கூறியுள்ளார்.

சீனா நீண்ட காலமாக பயந்ததைவிட அதிகமாக நேசிக்;கப்படவேண்டுமென்று விரும்பியது. உலகத்தில் தன்னைப்பற்றி ஒரு நேர்மறையான வடிவத்தை முன்வைத்து  அதன்மூலம் பாராட்டுக்களைப் பெற முனைந்தது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அண்மையில் சீனா அதிகப்படியாக தன் இன்னொரு பக்கத்தைக் காட்டியது.

அண்மைய ஆண்டுகளில் அதன் செல்வாக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாகிவிட்டன. அதன் முறைகள் மொஸ்கோவால் பயன்படுத்தப்பட்ட முறைகளை அதிகமாக ஒத்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கையின்படி தெரிகிறது. நேசிப்பதைவிட பயப்படுவது பாதுகாப்பானது என்று இன்று சீனா நினைப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். 

இந்த அறிக்கை வெளிநாடுகளில் சீனா  செல்வாக்கு செலுத்துவதற்கு தேவையான மிகத் தீங்கானவற்றிலிருந்து  (பொது ஜனநாயகம்) மிகத் தீங்கில்லாதவரையுள்ள (இரகசிய நடவடிக்கைகள்) வழிமுறைகளை சிந்தனைதொட்டிகள் மூலம்  அறிந்து தீவிரமாக கையாள்வது குறித்தும்   கோடிட்டுக் காட்டுகிறது.

2019 ஹொங்கொங் ஆhப்பாட்டங்கள் மற்றும் கொவிட்-19 தொற்று அமெரிக்காவில் உருவானது என்று மக்களை நம்பவைக்கும் முயற்சி என்பனவற்றை இலக்காகக் கொண்டு தைவான், சிங்கப்பூர், சுவீடன், கனடா நாடுகளில் நடைபெற்ற உதாரணங்களுக்கான  பல ஆய்வுகள் உள்ளன.

பிரான்ஸ் இராணுவ நிறுவனத்தின் இந்த அறிக்கை சீனா பற்றிய அதிகரித்த சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

கடந்த சில வருடகால சீனாவின் கடும்போக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடு களுக்கு பதில் அளிக்கும் வiயில், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் பீஜிங்குடனான உறவைப்பற்றி அதிக எச்சரிக்கையை வெளிக்காட்டியுள்ளன.

பசிபிக் முழுவதும் பாதுகாப்பு செலவினம் அதிகரிப்பது சீனாவின் இராணுவ செலவின் எதிர்வினையென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின்  சீன மூலோபாய பார்வை(The EU's 2019 EU-China Strategic Outlook)சீனாவை முறையான போட்டியாளர் என்று விவரித்தது.

இவ்வருட முற்பகுதியில் ஜப்பானின் 2021 இராணுவ அறிக்கை, சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் ஒருமித்த கருத்தின்றி தொடர்ந்தால் அவை சர்வதேச ஒழுங்கை  சீர்குழைக்குமென்றும் கூறியிருந்துது. அத்தடன் பிரான்ஸ் இராணுவத்தின்  2021ஆம் ஆண்டுக்கான கொள்கை ஏட்டில் சீனாவுடன் அதிகரித்த இராணுவ போட்டி என்னும் அமெரிக்க இராணுவத்தின் கருத்தையே பிரதிபலிக்கின்றன.

அண்மைய செயல்முறையொன்றில் யு.எஸ்., பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலிய நாடுகள் இணைந்து சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் ஓக்கஸ் என்னும் (AUKUS) குழுவொன்றை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  செரோன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .