Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எகிப்திய துறைமுகநகரான சுயஸில் நூற்றுக்கணக்கான அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நேற்று முரண்பட்ட எகிப்திய பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப் புகை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத் தளபதியாகவிருந்து எகிப்து ஜனாபதியாக அப்டெல் ஃபத்தா அல்-சிசியை அகற்றுமாறு கோரி எகிப்தின் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து எகிப்தின் 2011ஆம் ஆண்டு புரட்சியின் மய்யமான தஹ்ரிர் சதுக்கத்தில் கடுமையாக பாதுகாப்பு பிரசன்னமொன்று பேணப்பட்டிருந்தது.
எகிப்தின் முன்னாள் இஸ்லாமிய ஜனாதிபதியாக மொஹமட் மோர்சியை 2013ஆம் ஆண்டு இராணுவம் பதவியிலிருந்து அகற்றியமையைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் கீழ் ஆர்ப்பாட்டங்கள் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டங்கள் அரிதானவையாகக் காணப்படுகின்றன.
எவ்வாறெனினும், உயர்வடையும் பொருட்களின் விலைகள் காரணமாக எகிப்தில் எதிர்ப்பு வலுக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தான 12 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கடன் பொதியின் அங்கமொன்றாக 2016ஆம் ஆண்டு முதல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஜனாதிபதி அப்டெல் ஃபத்தா அல்-சிசியின் அரசாங்கம் விதித்துள்ளது.
இவ்வாண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நாளொன்றுக்கு 1.40 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு குறைவாகச் சம்பாதிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் ஏறத்தாழ மூன்றிலொரு எகிப்தியர்கள் காணப்படுகின்றனர்.
சுயஸில் இரண்டாவது நாள் இரவு தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அங்கு பாதுகாப்புப் படைகளின் வீதித் தடைகளையும் கவச வாகனங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கொண்டிருந்தனர்.
14 minute ago
21 minute ago
31 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
31 minute ago
38 minute ago