Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1979லிருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ஆப்கானிஸ்தான் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வந்தது. பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.
கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன. இதனால் தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர்.
பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தலிபான் அரசாங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.
34 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago