2025 மே 14, புதன்கிழமை

“எங்கள் மீது போர் தொடுக்க நினைப்பது பெரிய தவறு”

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பல உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், “இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நேதன்யாகு கூறுகையில், “தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஹிஸ்புல்லா அவ்வாறு முடிவெடுத்தால், அது வருத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் நாங்கள் தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசு ஆகிய இரண்டிற்கும் அழிவை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X