2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

எங்கு சென்றாலும் கையோடு கழிவறையைக் கொண்டு செல்லும் கிம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 31 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொரிய  ஜனாதிபதி கிம் ஜொங் உன் ( Kim Jong-un) எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் கையோடு கழிவறையை எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வட கொரிய ஜனாதிபதி கிம்  எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், தனக்கானபிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறையை  எடுத்துச் செல்வதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வடகொரியா கமாண்டோ பிரிவின் முன்னாள் ஊழியர் ஒருவர் பிரபல ஊடகமொன்றிக்கு  வழங்கிய செவ்வியில் , ” பொதுக்கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் தனக்கானபிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறையை மாத்திரமே   பயன்படுத்துகிறார். தன்னுடைய மலத்திலிருந்து தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால், அதனால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்’ என கிம் ஜோங் உன் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X