Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆயிரக்கணக்கான மக்களை துருக்கியுடனான எல்லையை நோக்கி வெளியேற்றிய சிரிய எதிரணியை வெளியேற்றுவதற்கான ஈரானிய ஆயுதக்குழுக்களால் ஆதரவளிக்கப்படும் பிரதான இராணுவ நடவடிக்கையொன்றில், வடமேற்கு சிரியாவில், ரஷ்யா தலைமையிலான வான் தாக்குதல்களில் நேற்று, குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ளவர்களும், மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
சிரிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அலெப்போவுக்கு மேற்காகவுள்ள கிராமமான கஃபார் தாலில் ஆறு சிறுவர்கள் உள்ளடங்கலாக எட்டுப் பேரைக் கொண்ட குடும்பம் கொல்லப்பட்டதாகவும், தென்கிழக்கு இட்லிப் மாகாணத்திலுள்ள மாரடப்சேஹ்யில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ளவர்களும், மீட்புப் பணியாளர்களும் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஈரானிய ஆயுதக்குழுக்களால் ஆதரவளிக்கப்படும் ரஷ்யா தலைமையிலான இராணுவ நடவடிக்கை கடந்த மாதம் ஆரம்பித்தது முதல் கடுமையாகத் தாக்கப்படும் எதிரணியின் பகுதிகளை ரஷ்ய, சிரிய அரசாங்க யுத்த விமானங்கள் தாக்கியதில் குறைந்தது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வான் தாக்குதல்களின்போது சிறப்புப் படைகளையும் தரையில் ரஷ்யா தரையிறக்கியுள்ள நிலையில் டசின் கணக்கான நகரங்கள் அழிவடைந்துள்ளதுடன், வைத்தியசாலைகள், பாடசாலைகள், மீட்புப் பணியாளர்களும் வீழ்த்தப்பட்டதாக உதவி முகவரகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், சிரியாவில் எதிரணியில் இறுதிப் பலம்வாய்ந்த இடமான வடமேற்கு சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் குறைந்தது 350,000 பேர் வெளியேறுகின்ற நிலையில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர்.
இந்நிலையில், சனநெருக்கடிமிக்க அலெப்போ புறநகரொன்றில் பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட றொக்கெட் தாக்குதலொன்றில் குழந்தையொன்றும், இரண்டு பெண்களும் கொல்லப்பட்டதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டுக்கெதிரான எதிரணிப் போராளிகளை பயங்கரவாதிகள் எனவே சிரிய அரச தொலைக்காட்சி விளிப்பது வழமையாகும்.
5 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago