2024 மே 02, வியாழக்கிழமை

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து : 11,000 பேர் வெளியேற்றம்

Janu   / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில்   எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்பகுதி முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் எரிமலையை சுற்றி ஆறு கிலோ மீற்றர் தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .