2024 மே 18, சனிக்கிழமை

எரிமலையிலிருந்து தினமும் 5 இலட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்!

Editorial   / 2024 மே 02 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்டார்டிகாவின் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகின்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை.

அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ஆம் ஆண்டு முதல் நெருப்பு குழம்பை வெளியேற்றி வரும் இந்த எரிமலை பகுதியில் ஆய்வகம் ஒன்றையே அமைத்து ஆய்வு செய்து வருகிறது அமெரிக்கா.

இந்த எரிமலை செயற்கை கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். அதாவது, வாயு மற்றும் தூசு துகள்களுடன் தங்க துகள்களையும் எரிமலை வெளியேற்றி வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் மதிப்பிலான தங்க துகள்களை இந்த எரிமலை வெளியேற்றி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் எரிமலையை சுற்றி 1000 கிலோ மீற்றர் வரை தங்க மழை போல தங்க துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. எரிமலை பாறைகளில் தங்க படிமங்கள் இருக்கலாம் என்றும் எரிமலை சீற்றத்தின் போது லாவா குழம்புடன் துகள்களாக தங்கம் வெளியேறி வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இதன் செயற்கை கோள்களை ஆய்வு செய்த போது எரிமலையின் உச்சியில் லாவா குழம்பால் மிகப்பெரிய ஏறி உருவாகி இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .