2025 மே 15, வியாழக்கிழமை

ஏப்பம் விட்டு பெண் சாதனை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த கிம்பர்லி “கிமிகோலா” விண்டர் என்பவர் ,சமீபத்தில் இவர் ஒரு உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே (பெண்கள் பிரிவில்) அதிக சத்தத்துடன் ஏப்பம் விட்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவரது ஏப்ப சத்தம் 107.3 டெசிபல் அளவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு, 2009-ம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த எலிஸா க்கோனி என்ற பெண் 107 டெசிபல் அளவு ஓசையில் ஏப்பம் விட்டதே சாதனையாக இருந்தது. ஆண்கள் பிரிவை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவிலி ஷார்ப் என்பவர் 2021-ம் ஆண்டு 112.7 டெசிபல் அளவிற்கு ஏப்பம் விட்டதே உலக சாதனையாக இருக்கிறது.

விண்டரின் ஏப்ப சத்தம் மிக்ஸி சத்தத்தை விடவும் (70-80 டெசிபல்), எலெக்ட்ரிக் ட்ரிலிங் மெஷின் (90-95 டெசிபல்) ஓசையை விடவும், மோட்டார் பைக்கை முழுதாக முறுக்கும் போது (100-110 டெசிபல்) வரும் ஓசையை விடவும் அதிகமாக இருந்ததாக கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .