2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஏலத்தில் விடப்பட்ட சூட்கேஸில் அழுகிய நிலையில் கிடந்த சடலங்கள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்லாந்தில் அண்மையில் கைவிடப்பட்ட பொருட்களுக்கான ஏலமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஏலத்தில் பயணப் பெட்டியொன்றும்  ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த பயணப் பெட்டியை விலைகொடுத்து வாங்கிய குடும்பத்தினர் அதனை திறந்து பார்த்த போது அதில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத்  தகவல் கொடுத்துள்ளனர். .
இச்சம்பவமானது  அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து
புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலங்களை சோதனை செய்ததில், சமீபத்தில் அவை பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X