2025 மே 14, புதன்கிழமை

ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் இராஜினாமா

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X