2026 ஜனவரி 21, புதன்கிழமை

’’ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது’’

Editorial   / 2026 ஜனவரி 21 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

நிறுவனம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உதவியாக இருக்கவில்லை என்று அவர் சொன்னார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திறன் குறித்து  தமக்குப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் நிறுவனம் ஒருபோதும் அதன் திறனை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.

அமைதிக் குழுவில் சேர அமெரிக்கா உலக நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்புகளை விடுக்கும் வேளையில்  டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

புதிதாக ஹங்கேரியும் (Hungary), மொரோக்கோவும் (Morocco) அழைப்பை ஏற்றுள்ளன. குழுவில் சேர பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) மறுப்பு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரஞ்சு ஒயின், ஷெம்பேன் பானங்களின் இறக்குமதிகள்மீது 200 விழுக்காடு விரி விதிக்கப் போவதாகத்  டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X