2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

’ஐக்கிய அமெரிக்க வான் தாக்குதலில் தென் லிபியாவில் 11 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் லிபிய நகரான முர்ஸுக்குக்கு அருகே ஒரு வாரத்துக்குள் தமது இரண்டாவது வான் தாக்குதலில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் 11 பேரைத் தாங்கள் கொன்றதாக ஐக்கிய அமெரிக்கப் படைகள் இன்று (25) தெரிவித்துள்ளன.

ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரைக் கொன்றதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்த கடந்த வியாழக்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தாக்குதல் நேற்று நடாத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அகற்றுவதற்காகவும், லிபிய மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கான வல்லமையைத் தகர்க்கவுமே குறித்த வான் தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க ஆபிரிக்க கட்டளையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் கெய்லர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

கரையோர நகரமான சியர்ட்டேயில் தமது கோட்டையை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு 2016ஆம் ஆண்டு முடிவில் இழந்ததைத் தொடர்ந்து சில ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் தெற்காக நகர்ந்து லிபியப் பாலைவனத்துக்குள் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X