Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு நேற்று முன்தினம் ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சான்டர்ஸை விட ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தென் பென்ட் நகர முன்னாள் மேயரான பீற் புடிச்சிச் நேற்று குறுகிய முன்னிலையை கொண்டிருப்பதுடன், 71 சதவீதமான நகரங்களின் வாக்களிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றார்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்யும் ஐந்து மாத நடைமுறையை ஆரம்பிக்கும் முகமாக ஐயோவாவில் 1,600 பொது இடங்களில் குறித்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கிடையேயான வாக்களிப்பு நேற்று முன்தினம் நடைபெற்று மறுதினமான நேற்று வெளியிடப்பட்ட முடிவுகளில் மூன்றாமிடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான எலிஸபத் வொரன் காணப்படுகின்றார்.
அந்தவகையில், வழமையான வெற்றியாளர் பெறுகின்ற 26.8 சதவீதமான வாக்குகளை பீற் புடிச்சிச் பெற்றுள்ள நிலையில், பேர்ணி சான்டர்ஸ் 25.2 சதவீதமான வாக்குகளையும், எலிஸபத் வொரன் 18.4 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஜோ பைடன் 15.5 சதவீதமான வாக்குகளைப் பெற்ற நிலையில், ஐக்கிய அமெரிக்க செனட்டரான அமி குளோபச்சர் 12.6 சதவீதமான வாக்குகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார்.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், முதலாவது வெளிப்படையான ஆண் சமபாலுறவு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக பீற் புடிச்சிச் காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago