Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடத்தே நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பொன்றைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவராக ஜேர்மனியின் உர்சுலா வொன் டயர் லயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரான ஜோன் க்ளூடி உங்கரை இவ்வாண்டு நவம்பர் முதலாம் திகதி ஜேர்மனியின் முன்னாள் பாதுகாப்பமைச்சரான உர்சுலா வொன் டயர் லயன் பிரதியிடவுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 747 உறுப்பினர்களின் 374 உறுப்பினர்களின் ஆதரவை உர்சுலா வொன் டயர் லயன் பெறவேண்டி இருந்த நிலையில், 383-327 என்ற வாக்குகளின் அடிப்படையில் அரைவாசிக்கும் மேலான உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றிருந்தார். மொத்தமாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு 751 உறுப்பினர்கள் இவ்வாண்டு மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், வாக்கெடுப்பின்போது நான்கு பேர் பிரசன்னமாயிருக்கவில்லை.
அந்தவகையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் உர்சுலா வொன் டயர் லயன் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியத் தலைநகரான ப்ரஸெல்ஸில் பிறந்த உர்சுலா வொன் டயர் லயன் ஏழு பிள்ளைகளைக் கொண்டிருப்பதுடன், அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் பெண் நோயியல் நிபுணராக பயிற்சி பெற்றிருந்தார்.
ஜேர்மனியில் ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான உபகரணக் குறைபாடுகள் தொடரில் உர்சுலா வொன் டயர் லயன் விமர்சிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜேர்மனின் சான்செலர் அங்கெலா மேர்க்கலின் நெருங்கிய நட்புறவானவர் உர்சுலா வொன் டயர் லயன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஆணைக்குழுவானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை இயற்றுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை அமுலாக்குவதுடன், தேவையேற்பட்டால் அங்கத்துவ நாடுகளுக்கு தண்டங்களை விதிக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago