2025 மே 14, புதன்கிழமை

ஒசாமாவை சுட்டவர் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்காவின் நேவி சீல் படை பிரிவினர் பாகிஸ்தானில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது 2011-இல் பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை ராபர்ட் ஓ நெய்ல் என்ற வீரர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த ராபர்ட் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடிதடி வழக்கு ஒன்றில் ராபர்ட்   கைதாகியுள்ளார். அவர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், உடல் காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதை தொடர்ந்து 3500 அமெரிக்க ​டொலர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். பின்லேடனை கொன்றது குறித்து 2017-இல் ராபர்ட் ஓ நெய்ல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த தகவலை அமெரிக்க அரசு மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .