2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஒன்றிணைந்த அரசாங்கப் பேச்சுக்களில் நெதன்யாகு, கன்ட்ஸ்

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்மொழியப்பட்டுள்ள இஸ்ரேலிய ஒன்றிணைந்த அரசாங்கமொன்று தொடர்பில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது வைரியான முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கன்ட்ஸும் பேரம்பேசல்களை நேற்று ஆரம்பித்துள்ள நிலையில், சுழற்சி முறையிலான பிரதமர் பதவி ஒப்பந்தத்தின் கீழ் யார் முதலில் பிரதமராகப் பதவி வகிப்பது தொடர்பில் கவனம் காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்பமைச்சர் அவிக்டோர் லிபர்மன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களில் இரண்டாவது தேர்தலில் தெளிவான வெற்றியொன்றைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து பகருவதன் மூலமே பதவியில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமர் பதவியிலிருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு உணர்ந்துள்ளார் எனத் தெரிகிறது.

தனிப்பட்ட ரீதியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ அல்லது பென்னி கன்ட்ஸோ 120 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையொன்றை பெற தத்தமது நட்புறவுக் கட்சிகளிடமிருந்து போதுமான ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்களை காரணங் காட்டி அவரின் வலதுசாரிக் கொள்கைகளையுடைய லிகுட் கட்சியுடன் சாரும் யோசனையை பொதுவெளியில் இடதுசாரிக் கொள்கைகளுக்கும், வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளையுடைய நீலம் மற்றும் வெள்ளைக் கட்சியின் தலைவர் பென்னி கன்ட்ஸ் தவிர்த்திருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X