2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஒப்பனையின்றி மனைவியைப் பார்த்ததால் விவாகரத்து

Ilango Bharathy   / 2021 நவம்பர் 05 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் நபர் ஒருவர் திருமணமாகி ஒரே மாதத்தில் தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ள விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தமது மனைவியை பேஸ் புக் மூலம் சந்தித்ததாகவும், பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் திருமணத்திற்குப் பின்பு தான், மனைவியின் உண்மையான முகத்தைப் பார்த்ததாகவும், முக ஒப்பனையில்லாத மனைவியின் முகத்தைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ”தனது மனைவி தன்னை  ஏமாற்றிட்டதாகக் கூறி” குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் அவர்  பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X