2025 மே 15, வியாழக்கிழமை

ஒரு நாள் கணவன்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் மட்டும் திருமணங்கள் பரவலாக அதிகரித்துள்ளன. இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக இவர்கள் ஒரு நாள் திருமணம் செய்து கொள்கின்றார்கள்.

அங்குள்ள வழக்கத்தின் படி ஏழையாகத் திருமணம் கூடச் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது. இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என அவர்கள் நம்புகிறார்கள்.

சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்பதை நம்புகிறார்கள். மேலும், அவர்கள் புதைக்கப்படும் போது சொர்க்கத்தில் தேவை என அவர்களுக்குப் பணத்தையும் தேவையான பொருட்களையும் கூட சேர்த்தே புதைக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .