2025 மே 15, வியாழக்கிழமை

ஒரு பாலின திருமண சட்டம் நிறைவேற்றம்

Freelancer   / 2023 ஜூன் 21 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பாலின திருமண சட்டத்திற்கு எஸ்டோனியா பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் முதல் மத்திய ஐரோப்பிய நாடாகவும், முதல் முன்னாள் சோவியத் நாடாகவும் எஸ்டோனியா மாறியுள்ளது.

இது குறித்து கல்லாஸ் பதிவிட்ட ட்வீட்டில், எஸ்டோனியா ஒரு பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த வரலாற்று முடிவுடன் நாங்கள் மற்ற நோர்டிக் நாடுகளுடன் இணைகிறோம். அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் மற்றும் மக்கள் சுதந்திரமாக நேசிக்கக்கூடிய ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம். என்று கூறியுள்ளார்.

ஒரு பாலின திருமண சட்டம் தொடர்பாக 101 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், இந்த மசோதா 55 வாக்குகளைப் பெற்றது. இச்சட்டம் 2024ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .