2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமை இரத்து

Freelancer   / 2025 மே 26 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை இரத்து செய்துள்ளது. இதனால்,திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.

குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இவர் 2023 டிசம்பரில் அதிகாரத்திற்கு வந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக, "உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்" என அறிவித்து, இந்த குடியுரிமை இரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

இதனால், 1987ஆம் ஆண்டு முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் தனிப்பட்ட சாதனைகளுக்காகக் குடியுரிமை பெற்ற பிரபலங்களான பாடகி நவால் மற்றும் நடிகர் தாவூத் ஹுசைன் ஆகியோரும் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X