2025 மே 15, வியாழக்கிழமை

ஓகஸ்டில் இரட்டை சந்திர கிரகணம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓகஸ்ட் மாதம் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக இருக்கும், ஏனெனில் இது இரட்டை சந்திர கிரகண நிகழ்வைக் கொண்டுள்ளது.

இந்த மாதம் முழு சூப்பர் மூனுடன் தொடங்குகிறது, இன்றிரவு (01) உதயமாகும்,  ஓகஸ்ட் இறுதியில் ஓர்ரு அரிய நீல நிலவு தென்படும்

அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) இரவு வான்வெளியில்  சந்திரன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியிலிருந்து 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்) தொலைவில் முழு சூப்பர் மூன் இன்றிரவு உயரும், இது கூடுதல் பிரகாசமான மற்றும் பெரிய நிலவை காணலாம்.

 சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என்று பாகிஸ்தான் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஜாவேத் இக்பால் கூறினார்.

ஓல்ட் ஃபார்மர்ஸ் பஞ்சாங்கத்தின்படி, செவ்வாய்கிழமை பிற்பகல் 2:32 மணிக்கு சந்திரன் உச்சக்கட்ட வெளிச்சத்தை அடையும்

"அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, உதயமாகும் சந்திரனைப் பார்க்க உங்கள் பார்வையை தென்கிழக்கு பக்கம் திருப்புங்கள்" என்று யுஎஸ்ஏ டுடே கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .