2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது உறுதி : ஐ.நா அறிவிப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் ஐந்து இனப்படுகொலை செயல்களில்  படுகொலைகள், கடுமையான தீங்கு விளைவித்தல், அழிவுகரமான வாழ்க்கை நிலைமைகளை விதித்தல் மற்றும் பிறப்புகளைத் தடுத்தல் போன்ற 4 இனப்படுகொலை செயல்களை இஸ்ரேல் புரிந்துள்ளதாக அந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இராணுவ நடத்தை, இனப்படுகொலை நோக்கத்தைக் காட்டுகின்றன என்று ஆணைக்குகுழு குறிப்பிடுகிறது.

2023 ஒக்டோபர் முதல் குறைந்தது 64,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பரவலான இடம்பெயர்வு, பஞ்சம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு அழிவு ஆகியவற்றையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் இனப்படுகொலையைத் தூண்டியதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு மாறாக ஹமாஸையே குறிவைத்து தொடர்ந்து செயல்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதனிடையே, இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குறிப்பிடும் தென்னாப்பிரிக்காவின் வழக்கை சர்வதேச நீதிமன்றம் பிரத்தியேகமாக விசாரித்து வருகிறது, இதனையும் இஸ்ரேல் "முற்றிலும் ஆதாரமற்றது" என்று குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X