2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடலில் கொட்டப்பட்ட இரசாயன ஆயுதங்கள்; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டாம் உலகப்போரில் ஐரோப்பா முழுவதையும் பிடிக்க ஹிட்லரின் படைகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக அதி பயங்கரமான இரசாயன ஆயுதங்களை ஜேர்மனி அரசு உருவாக்கியது.

எவ்வாறு இருப்பினும் ஹிட்லரின் மறைவுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததால் நாசி  படையினரிடம் இருந்த இரசாயன ஆயுதங்களை அழிக்க பிரித்தானியா, அமெரிக்கா, உள்ளிட்ட  பல நாடுகள் உத்தரவிட்டன.

இதனையடுத்து பால்டிக் கடலின் மையப் பகுதியான Gotland Basin-ல் ஆயுதங்கள் மூழ்கடிக்கப்பட்டன.

இந்நிலையில், பால்டிக் கடலில் போலந்து அறிவியல் அகாடமி கடந்த சில வருங்களாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவொனது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்து  ஆய்வு அறிக்கையில் ” கடலில் கொட்டப்பட்ட இராசாய ஆயுதங்கள் 70 மீற்றர் சுற்றளவு வரை கடலை மாசுபடுத்துகின்றன எனவும் , நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இதனால் பெரும் தாக்கத்தினைச் சந்தித்து வருவதாகவும்” சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பால்டிக் கடற்பரப்பில் குவிக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள், பீப்பாய்கள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயதங்களின் சரியான அளவை மதிப்பிடுவது கடினம் என்றாலும், அவை 40,000 முதல் 100,000 தொன்  வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X