Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசிபிக் பெருங்கடலில் கடலில் செல்லப்பிராணியுடன் சாகச பயணம் மேற்கொண்டு காணாமல் போன நபர், இரண்டு மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறார் டிம் ஷாடாக். 51 வயதான இவர் தனது செல்லப்பிராணி பெல்லாவுடன் மெக்சிகோ நகரமான லா பாசிலிருந்து தனது சிறிய படகில் கடல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பசிபிக் பெருங்கடலில் 6000 கிலோ மீற்றர் தூரம் பயணித்து பிரான்சின் பாலினெசியா தீவை அடைய வேண்டும் என்பது அவரின் திட்டம்.
ஆனால், தீவிர கடல் சீற்றத்தில் சிக்கி அவரின் படகு கடும் சேதமடைந்தது. மேலும் அதில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்களும் பழுதாகின. கையிருப்பில் இருந்த உணவையும் நீரையும் வைத்து இருவரும் சில நாட்களை கடத்தியுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல நிலைமை மோசமானதால், அவரும் அவரது நாயும் மழை நீரை சேமித்து குடித்தும், மீன்களை பிடித்து உண்டும் உயிர் பிழைத்துள்ளனர்.
பின்னர் மீனவர்களின் கண்களில் பட்டதால் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர். கரை திரும்பிய டிம்மை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago