Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனை பெற்ற நளினி, மகளின் திருமண ஏற்பாட்டுக்காக சிறைவிடுப்பில் வெளியே வந்திருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் இடம்பெறாத நிலையில் சிறைவிடுப்பு முடிவடைந்ததால் கண்ணீருடன் சிறைக்குத் திரும்பினார்.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி தண்டனை அனுபவித்து வருகிறார். ஆயுட் தண்டனை பெற்ற அவருடைய கணவர் முருகன் ஆண்கள் சிறையில் உள்ளார். இவர்களுடைய மகள் ஹரித்ரா பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் வைத்தியருக்கு படித்து வருகிறார்.
அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி மூன்று மாதம் சிறைவிடுப்புக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு நிபந்தனையுடன் ஒரு மாதம் சிறைவிடுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி சிறையில் இருந்து வெளியேவந்து சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது அவர் தனது சிறைவிடுப்பை நீட்டிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதன்படி அவருக்கு மேலும் மூன்று வாரங்கள் சிறைவிடுப்பு நீட்டிக்கப்பட்டது. சிறைவிடுப்பில் அவர் தங்கியிருந்த நேரத்தில் தினமும் வேலூர் சத்துவாச்சாரி பொலிஸ்ஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக அவரை துணைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மணிமாறன் தலைமையில் பொலிஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வந்தனர்.
அவருடன், அவருடைய தாயார் பத்மாவதி தங்கியிருந்தார். நளினியின் தம்பி பாக்கியநாதன், தங்கை கல்யாணி, பாக்கியநாதனின் மகள் கவிநிலவு ஆகியோரும் அவ்வப்போது வந்து நளினியுடன் தங்கியிருந்தனர். பரோலில் வந்திருந்த நேரத்தில் ஆண்கள் சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனை அவர் மூன்று முறை சந்தித்து பேசி உள்ளார்.
அவருடைய மகள் ஹரித்ரா இலண்டனிலிருந்து வேலூருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. மேலும் சிறைவிடுப்பு வழங்கிய நேரம் ஆடி மாதம் என்பதால் மகள் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில் நளினியின் சிறைவிடுப்பு நேற்று முன்தினம் மாலை ஐந்து மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் பலத்த பொலிஸ் காவலுடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago