Editorial / 2019 மே 29 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவுக்கு அருகிலுள்ள கவஸாகி நகரத்தில், பஸ்ஸொன்றுக்காக காத்திருந்த பாடசாலைச் சிறுவர்கள் குழுவொன்றை கத்தி வைத்திருந்த நபரொருவர் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், வசிப்பிடப் பகுதியில் குறைந்தது 18 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 11 வயதான சிறுமியொருவர், 39 வயதான நபரொருவர் என இருவர் இறந்துள்ளனர்.
இதேவேளை, தனது தாக்குதலைத் தொடர்ந்து தனது கழுத்தில் குத்திய 50 வயதுகளையுடைய சந்தேகநபர் பின்னர் வைத்தியசாலையில் இறந்துள்ளார்.
ஜப்பானில் வன்முறைக் குற்றங்கள் அரிது என்ற நிலையில், தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கும்போது இரண்டு கைகளிலும் சந்தேகநபர் கத்திகளை வைத்திருந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் பாடசாலைச் சிறுமிகளாவர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலைக் கண்டித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, இதற்கெதிராக கடுமையான கோபத்தை உணருவதாகக் கூறியுள்ளார்.
குறித்த சம்பவமானது, உள்ளூர்ப் பூங்கா மற்றும் ரயில் நிலையமொன்றுக்கு அருகில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் கத்தோலிக்க பாடசாலையொன்றான கரித்தாஸ் ஆரம்பப் பாடசாலைக்கருகே பஸ்ஸில் ஏறுவதற்காக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மாணவர்கள் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் வரிசையை நபரொருவர் அணுகியதை தாண் கண்டதாக கரித்தாஸ் பஸ் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அந்த நபர் சிறுவர்களைக் கத்தியால் குத்த ஆரம்பித்துள்ளதுடன், பின்னர் பஸ்ஸுக்குள் சென்று, பஸ்ஸுக்குள்ளும் சிறுவர்களை கத்தியால் குத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .