2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கனடா பாராளுமன்றத்தில் மூன்று இலங்கை தமிழர்கள்

Freelancer   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

 கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் அனிதா ஆனந்த் ஆகியோர் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து இலங்கைத் தமிழ் பூர்விக தமிழ் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ - கில்ட்வுட் - ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து யுவனிதா நாதனும் பிக்கரிங் - புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார். Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த் போட்டியிட்டிருந்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X